சென்னை,மார்ச்.14- இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில், இன்று மாலையே சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,400க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8300க்கும் விற்பனையாகிறது.